Payload Logo
இந்தியா

"பூச்சி கடிச்சிருச்சு இழப்பீடு கொடுங்க" வழக்கு தொடர்ந்த பெண்! நீதிமன்றம் போட்ட உத்தரவு?

Author

bala

Date Published

Karnataka

கர்நாடகா :தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும் செய்திகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். அப்படி தான், மங்களூரில் தீபிகா என்ற பெண் பூச்சி கடிதத்திற்கு வழக்கு போட்டு ரூ.1.29 லட்சம் இழப்பீடு வாங்கி இருக்கிறார். இந்த வழக்கு குறித்து விவரமாக பார்ப்போம்...

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபிகா என்ற பெண்ணும் அவரது கணவரும் ரெட் பஸ் செயலி மூலம் மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு பஸ் டிக்கெட்டை முன்பதிவு செய்து இருவரும் கன்னட சேனல் ஒன்றில் நடக்கும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தனர். பேருந்தில் நுழைந்தவுடன், பேருந்து சுகாதாரமற்றதாக இருப்பதைக் கண்ட அவர்கள் ஆரம்பத்திலே அதிர்ச்சியடைந்தனர்.

அதன்பிறகு, அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து ஒரு பூச்சி தீபிகாவை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இரவு முழுவதும் அரிப்பினால் அவதிப்பட்ட அவருக்கு தூக்கமே வரவில்லை. ஊழியர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பூச்சி கடியால் பாதிக்கப்பட்டதாகவும், உடலில் வீக்கம் ஏற்பட்டதாகவும் இது ரியாலிட்டி ஷோவில் அவரது நடிப்பைப் பாதித்தது என கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து பூச்சி கடித்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  வழக்குச் செலவு ரூ.10,000, டிக்கெட் கட்டணம் ரூ.850, அபராதம் ரூ.18,650 உட்பட ரூ.1.29 லட்சம் இழப்பீடாக வழங்க பேருந்து நிறுவனத்திற்கும், பேருந்தின் உரிமையாளரும், அவர் டிக்கெட்டை முன்பதிவு செய்த ரெட் பஸ் செயலியும் கூட்டாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.