Payload Logo
இந்தியா

சட்டவிரோத குடியேற்றம்... இந்தியர்களை அமிர்தசரஸில் தரையிறக்குவது ஏன்? - பஞ்சாபில் புது பஞ்சாயத்து.!

Author

gowtham

Date Published

Amritsar US Deports Indians

பஞ்சாப் :அமெரிக்காவில் சட்டவிரோத இந்திய குடியேறிகள் பஞ்சாபில் தரையிறங்குவது தொடர்பான அமெரிக்க இராணுவத் திட்டம் குறித்து பஞ்சாப் அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 119 இந்திய குடியேறிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு விமானங்கள் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தகவல்களின்படி, 119 இந்திய குடியேறிகளில் பஞ்சாபிலிருந்து 67 பேர், ஹரியானாவிலிருந்து 33 பேர், குஜராத்திலிருந்து 8 பேர், உத்தரபிரதேசத்திலிருந்து 3 பேர், மகாராஷ்டிராவிலிருந்து 2 பேர், கோவாவிலிருந்து 2 பேர், ராஜஸ்தானிலிருந்து 2 பேர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரிலிருந்து தலா ஒருவர் அடங்குவர்.

இந்நிலையில், அமிர்தசரஸில் விமானங்களை தரையிறக்குவதன் மூலம், பஞ்சாபை அவமதிக்க மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து பேசிய அவர், உண்மையில், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படும் இந்திய குடிமக்களை ஏற்றிச் செல்லும் இரண்டாவது விமானம் நாளை அமிர்தசரஸில் தரையிறங்கும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

எந்த அடிப்படையில் அமிர்தசரஸ் விமானத்தை தரையிறக்க தேர்வு செய்யப்பட்டது என்பதை வெளியுறவு அமைச்சகம் விளக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்கள் அமிர்தசரஸில் மட்டும் தரையிறக்கப்படுவது சீக்கியர்களை அவமதிக்க முயற்சிகிறது.

ஹரியானா, குஜராத்தைத் தரையிறங்கும் இடமாக ஏன் தேர்வு செய்யவில்லை? இதற்குப் பின்னால் பாஜகவின் சதித்திட்டம் இருக்கிறதா?" என கேள்வி எழுப்பினார். ஒன்றிய அரசு உள்நோக்கங்களுடன் வேண்டுமென்றே அமிர்தசரஸை தேர்ந்தெடுத்துள்ளது என பஞ்சாப் மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.