Payload Logo
சினிமா

"நீங்க எப்போ வாழ போறீங்க? சிறிய வாழ்க்கையில் ஏன் இவ்வளவு வெறுப்பு..?" - அஜித் கேள்வி.!

Author

gowtham

Date Published

AjithKumar

துபாய்:துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றிருக்கிறது. பலரும் அஜித்தின் வெற்றிக்கு வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் தற்போது துபாயில் பேட்டியளித்திருக்கிறார்.

அதில், "அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?" என்று ரசிகர்களிடம் நடிகர் அஜித் கேள்வி எழுப்பிருக்கிறார். சமூக வலைதளங்கள் தற்போது TOXIC ஆக உள்ளது. வாழ்க்கை மிகவும் சிறிது.

ஏன் இவ்வளவு TOXIC-ஆக இருக்கவேண்டும்? மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்காதீர்கள். உங்கள் வாழ்வில் கவனம் செலுத்துங்கள். உலகளவில் மன ஆரோக்கியம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. சிறிய வாழ்க்கையில் ஏன் இவ்வளவு வெறுப்பு..?

அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? உங்கள் அன்பிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ஆனால், தயவுசெய்து உங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுங்கள். எனது ரசிகர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் நானும் சந்தோஷமாக இருப்பேன்" என்று சமூக அக்கறையுடன் பேசியிருக்கிறார்.

unknown node