தவெக பொதுக்குழு கூட்டம்.! உறுதிசெய்யப்பட்ட தேதி மற்றும் இடம் எங்கு? எப்போது தெரியுமா?
Author
gowtham
Date Published

சென்னை :தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், அதில் ஓராண்டை கடந்துவிட்டார். இதுவரை மாநாடு, புத்தக வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்ட விஜய் முன்னதாக பரந்தூர் பகுதியில் நேரடியாக மக்களை சந்திக்கவும் செய்தார்.
தற்போது மாவட்டம் மற்றும் வட்டம் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு அரசியல் கட்சி சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்தப்படும்.
இந்த நிலையில், பிப்ரவரி 26-ல் சென்னை அருகே தவெக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஈசிஆர் சாலையில் உள்ள Confluence Convention Centre-ல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
unknown nodeஇது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகம் செய்திகளின் சமூக வலைதள பக்கத்தில் செய்தி வெளிட்டதன் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஈசிஆர் அருகே இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.