Payload Logo
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய விவகாரம்.. ராஜ்பவன் விளக்கத்தில் மாற்றம் என்ன?

Author

gowtham

Date Published

RN Ravi - TN Assembly

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நிமிடத்தில் உரையாற்றாமலேயே புறப்பட்டுச்சென்றார்.

சட்டப்பேரவையில் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காமல் இருந்த ஆளுநர் ரவி, இம்முறை அதே காரணத்தைக் கூறி அவையில் இருந்தே வெளியேறினார். சட்டப்பேரவையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபு ஆகும்.

ஆனால், தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர், சபாநாயகரிடம் வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என வெளியேறினார் என்று ஆளுநர் மளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

unknown node

இந்த நிலயில், இது தொடர்பாக ராஜ்பவன் (ஆளுநர் மளிகை) தனது எக்ஸ் தளத்தில், "முதலில் விளக்கம் கொடுத்திருந்த பதிவை நீக்கிவிட்டு, மீண்டும் புதிய விளக்கத்தை கொடுத்தது. அதாவது, பழைய பதிவில் "நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்படும்" என்று குறியிருந்தது. புதிய பதிவில் "அனைத்து சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படும்" என்று கூறியிருக்கிறது.

unknown node