ஜஸ்ட் மிஸ்!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி.! நடந்தது என்ன?
Author
gowtham
Date Published

உத்தரப் பிரதேசம் :இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்ற கார் மேற்குவங்கத்தின் தாதுபூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எவ்வித காயமும் இல்லை.
பர்தாமன் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு இந்த விபத்தால், கங்குலி சுமார் 10 நிமிடங்கள் சாலையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த விபத்தையும் பொருட்படுத்தாமல் அவர் விழாவில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் மத்தியில் அவர் உரையாடினார்.
நடந்தது என்ன?
பர்தமனில் ஒரு விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. லாரி மீது மோதாமல் இருக்க கங்குலியின் கார் ஓட்டுநர் பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டது. அவற்றில் ஒன்று கங்குலியின் காரை மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், கங்குலியின் வாகனத் தொடரணியில் இருந்த இரண்டு கார்கள் சிறிய அளவில் சேதமடைந்தன.
கங்குலி ஈடுபாடு
2025 WPL சீசனுக்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணியை வலுப்படுத்துவதில் கங்குலி முக்கிய பங்கு வகித்தார். மேலும் WPL அணியை வெற்றியை நோக்கி வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது WPL 2025 சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கான வீரர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உத்தி வகுப்பதில் கங்குலி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்