தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?
Author
gowtham
Date Published

தூத்துக்குடி :தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் 2100 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் உள்ளன. தூத்துக்குடி நகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள வாகைகுளத்தில் அமைந்துள்ளது. சென்னை, பெங்களூரு, மற்றும் பிற முக்கிய நகரங்களுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
மும்பை, தில்லி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு கூடுதல் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கம் தூத்துக்குடி விமான நிலையத்தை தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கியமான விமான நிலையமாக உயர்த்துவதுடன், தூத்துக்குடி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.