திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள்.! என்னென்ன?
Author
castro
Date Published
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின், தொண்டர்கள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். 2026 பொதுத் தேர்தலுக்கு எழுச்சியூட்டும் பொதுக்குழுவாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். குறிப்பாக, இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை..,
unknown nodeசிறப்பு தீர்மானம்
நமது மண், மொழி, மானம், மாநில உரிமைகளை காத்திட தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஓர் குடையின்கீழ் திரண்டு, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயம் எனக் குறிப்பிட்டு பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை வாசித்த முதலமைச்சர் ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் மண், மொழி, மானம், நலனையும் உரிமைகளையும் காத்திட "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ‘ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கை மூலம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை திமுகவின் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம். துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளை காத்திடும் பொருட்டு. 'ஓரணியில் தமிழ்நாடு' என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது'' என்றார்.