Payload Logo
விளையாட்டு

“ஆஸி ரசிகர்கள் எங்களை சீண்டுனாங்க பதிலடி கொடுத்துட்டோம்”…தென்னாப்ரிக்க கேப்டன் பவுமா பேச்சு!

Author

castro

Date Published

லண்டன் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship ) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தனது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. 1998 ஆம் ஆண்டு ஐசிசி நாக்-அவுட் ட்ரோபி வென்ற பிறகு, 27 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஐசிசி கோப்பையையும் கைப்பற்றவில்லை. எனவே, ஒரு முறையாவது ஐசிசி கோப்பையை வெல்லவேண்டும் என்பது அணியின் கனவாக இருந்து வந்தது.

அந்த கனவை தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் பவுமா கோப்பையை வாங்கிக்கொடுத்து நினைவாக்கியிருக்கிறார். இந்நிலையில், கடந்த காலத்தில் அவர்கள் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு இது ஒரு பதிலடியாக உள்ளது. தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, இந்த வெற்றியை உணர்ச்சிமிக்க வார்த்தைகளால் கொண்டாடினார்.

போட்டியின் இறுதி நாளில், ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் தென்னாப்ரிக்க அணியை “Chokers” (பெரிய போட்டிகளில் தோல்வியடையும் அணி) என்று குறிப்பிட்டு, சண்டையைத் தூண்டும் வகையில் சீண்டலில் ஈடுபட்டனர். இந்த சவால் மிக்க பேச்சு, தென்னாப்ரிக்க அணியின் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்தது. இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய பவுமா ” அவர்கள் எங்களை சீண்டினர், சண்டையைத் தூண்டினர். ஆனால், இந்த இறுதி யுத்தத்தில் நாங்கள் அவர்களுக்கு மறக்க முடியாத பதிலடி கொடுத்துள்ளோம்.

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை உடைத்து, தென்னாப்ரிக்காவின் மனவலிமையை உலகிற்கு காட்டியது. இந்தப் போட்டியில், தென்னாப்ரிக்க அணியை பலர் நம்பினர், அதே நேரத்தில் பலர் அவர்கள் மீது சந்தேகம் கொண்டனர். கடந்த காலங்களில், முக்கியமான போட்டிகளில் நாங்கள் தோல்வியை சந்தித்த காரணத்தால்,  எங்களுடைய  மீது “Chokers” என்ற பட்டம் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், இந்த WTC இறுதிப் போட்டியில், தென்னாப்ரிக்க அணி அனைத்து சந்தேகங்களையும் தவிடுபொடியாக்கியது. “எங்களை நம்பியவர்களுக்கு நன்றி, சந்தேகப்பட்டவர்களுக்கு இந்த வெற்றி ஒரு பதில்,” என்று பவுமா உறுதியாகக் கூறினார்.