Payload Logo
Untitled category

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள்..!

Author

sharmi

Date Published

weight loss

உடல் எடையை குறைக்க இந்த எளிய உணவு மாற்றத்தை பின்பற்றுங்கள்.தற்போது பலரும் உடல் எடை அதிகரித்து அதனை குறைக்க முயல்கின்றனர். இருந்தபோதிலும் சரியான முறையில் பயிற்சி எடுக்காமலும், உணவில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதனால் உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு குறைவு. உடல் எடையை குறைக்க நாம் கடைபிடிக்க வேண்டிய மிக எளிமையான உணவு மாற்றத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

புரதசத்துதினமும் உங்களது உணவில் புரத சத்து உணவை அதிகரிக்கவும். உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும் பொழுது அதனை சரி செய்ய உடல் வலிமை என்பது அவசியம். அதனை தக்கவைக்க சரியான அளவு புரதம் மிகவும் அவசியம்.ஆனால், இந்த அதிக புரத உணவு நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை.

ஒரு உணவு நிபுணரைத் தொடர்புகொண்டு உங்களது உடலின் அடிப்படை மருத்துவ நிலைமைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும். அதன்பிறகே நீங்கள் உட்கொள்ளக்கூடிய புரதத்தின் அளவு குறித்து பரிந்துரைகளைப் பெற வேண்டும். மேலும், பொதுவாக வயது வந்தோர் ஒரு கிலோ உடல் எடையில் 0.8 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும். ஆண் ஒரு நாளைக்கு 56 கிராம் புரதத்தையும், பெண் ஒரு நாளைக்கு 46 கிராம் புரதத்தையும் உண்ண வேண்டும். புரதத்திற்கு அடுத்தபடியாக நார்சத்து உடல் எடையை குறைக்க  பயன்படும்.

நார்சத்துஒரு ஆண் 38 கிராம் அளவும், ஒரு பெண் 25 கிராம் அளவும் நார்ச்சத்துள்ள உணவை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து தினமும் தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியம்.

தண்ணீர்  குடிக்கும் முறைபொதுவாக ஒரு மனிதர் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் உணவிற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

கார்போஹைட்ரெட்அடுத்தபடியாக உணவில் கார்போஹைட்ரைட் சேர்த்து கொள்வதை குறைக்க வேண்டும். மேலும், உணவை உண்ணும் பொழுது நன்கு மென்று உண்ணுவது அவசியம். நீங்கள் உணவை விழுங்குவதற்கு முன் 32 முறை மெல்வது அவசியம். இது போன்ற முறைகளை கடைபிடித்து உடல் எடையை எளிமையாக குறையுங்கள்.