சூப்பர் ஸ்டார் வசனத்தை சூப்பராக தமிழில் பேசி அலறவைத்த தல தோனி.! வைரலாகும் வீடியோ...
Author
gowtham
Date Published

சென்னை :இந்த ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகியுள்ளது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார், அதே நேரத்தில் ஆகஸ்ட் 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர், ஐந்து முறை ஐபிஎல் வென்ற சிஎஸ்கே அணி கேப்டனின் இந்த ஆண்டு விலகல் குறித்த யுகங்கள் பரவலாகி வருகின்றன. சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தோனி தற்போது ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், தோனி விளையாடும் கடைசி தொடர் இதுவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தோனி தமிழ் பட வசனங்களை பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி மற்றும் சஞ்சு சாம்சன் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது ரசிகர்கள் அவர்களை ஒரு தென்னிந்திய நட்சத்திரத்தின் டயலாக் சொல்லும் படி கேட்டனர். உடனே தோனி, 'என் வழி தனி வழி' என அவருடைய மாடுலேஷனில் சொல்லி மிரள வைத்தார். அதே போல சஞ்சு, 'நா ஒரு தடவ சொன்ன 100 தடவ சொன்ன மாதிரி' என திக்கித்திக்கி சொல்ல, அரங்கமே கரகோஷம் எழுப்பியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node