Payload Logo
இந்தியா

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!

Author

bala

Date Published

Dr. V. Narayanan

சென்னை :இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வரும் ஜனவரி 14, -ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராகப் பணியாற்றுவார்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் திரு சோம்நாத் அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு அடுத்ததாக ஒரு தலைவர் நியமிக்கப்படவேண்டும் என்பதால் தற்போது, வி. நாராயணன் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவரின் தொழில்நுட்ப திறன்களாலும், பிரமாண்டமான திட்டங்களை கையாண்ட அனுபவம் அவரிடம் உள்ளது. எனவே, இஸ்ரோவின் சிறப்பான வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதால் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சோம்நாத்திற்கு முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த கே. சிவன் இஸ்ரோ தலைவராகப் பணியாற்றியுள்ளார். அவரை தொடர்ந்து அடுத்த தமிழராக இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழகம் மட்டுமின்றி குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் செய்தியாக அமைந்துள்ளது.

யார் இந்த வி. நாராயணன்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, எம்.கே-3 மற்றும் கிரயோஜெனிக் என்ஜின் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்திய விண்வெளித் துறையின் தொடர்புடைய பிரிவுகளில் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node