Payload Logo
உலகம்

#USElection2024 : அயோவாவில் கமலா ஹாரிஸ் முன்னிலையா? கடுப்பாகிய டொனால்ட் டிரம்ப்!

Author

bala

Date Published

Donald J. Trump kamala harris

அமெரிக்கா :அதிபரைத் தேர்வு செய்யும் பெரிய தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் தீவிரமாக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு யார் அதிபர் ஆகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு முந்தியைக் கருத்துக் கணிப்புகளும் நடந்து முடிந்தது.

அதில், டோனால்ட் டிரம்ப்க்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமெரிக்காவின் (Iowa) அயோவாவில் நடந்த கருத்துக் கணிப்பில் அவர் கமலா ஹாரிஸை விட 3 சதவீத புள்ளிகள் பின்தங்கிய நிலையிலிருந்ததாக, கருத்துக் கணிப்பு செய்யும் ஆன் செல்சர் தெரிவித்திருந்தார். இது டிரம்ப் ஆதரவாளருக்குமே மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால், டொனால்ட் ட்ரம்ப் 2016 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அயோவாவை வென்றார். இந்த சூழலில், ஆன் செல்சர் மலா ஹாரிஸ் தான் இந்த முறை 3 சதவீதம் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவித்தது டொனால்ட் டிரம்ப்பை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

இதற்குக் கடுப்பாகி டிரம்ப் தனது பதிலையும் கொடுத்து இருக்கிறார். truthsocial என்ற சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியதாவது " டொனால்ட் ஜே. டிரம்பை விட எந்த ஜனாதிபதியும் விவசாயிகளுக்கும், அயோவாவின் பெரிய மாநிலத்திற்கும் நல்லது செய்தது இல்லை. டிரம்ப் தான் அதிகமாக நல்லது செய்திருக்கிறார்.

இந்த மாதிரியான கருத்துக் கணிப்பை வெளியிடுபவர்கள் ட்ரம்ப் பொறுப்பாளர். இதைப்போல, கடந்த முறை இப்படியான தவறாகக் கூறியது, என்னைப் பல மடங்கு உயர்த்தியது. நான் விவசாயிகளை நேசிக்கிறேன், அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். ஜஸ்ட் அவுட் எமர்சன் வாக்கெடுப்பில் அயோவாவில் எனக்கு 10 புள்ளிகள் கிடைத்தன. அதற்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

unknown node