Payload Logo
தமிழ்நாடு

பிப்.25-ல் தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.!

Author

gowtham

Date Published

Amit Shah visits Coimbatore

டெல்லி :மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறார். அங்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். மேலும், அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்ட பாஜக அலுவலகங்களையும் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 25 ஆம் தேதி அன்றிரவு கோவை ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவிலும் அவர் பங்கேற்கிறார். கோவை மாவட்டம் ஈஷா மையத்தில் பிப்ரவரி 26 (புதன்கிழமை) நிஷித கால் பூஜை அல்லது நள்ளிரவு வழிபாட்டுடன் கொண்டாடப்படவிருக்கிறது.

இந்த சிவராத்திரி விழா பிப்ரவரி 26, அதிகாலை 12:09 மணி முதல் பிப்ரவரி 27 அன்று அதிகாலை 12:59 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா கோவை வருவதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. அமித் ஷா வருகைவோட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவுள்ளனர்.