Payload Logo
தமிழ்நாடு

பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 பேர் கைது... போலீஸார் தீவிர விசாரணை.!

Author

gowtham

Date Published

Fire cracker - Arrest

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இப்படி இருக்கையில், பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில், அதை அலட்சியமாக கையாளுகின்றது என்று கூறி, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலு இந்த வெடி விபத்து சம்பவம்  தொடர்பாக, ஆலை உரிமையாளர் உட்பட சதீஷ்குமார், நிரஞ்சனா தேவி, கணேசன் ஆகிய 4 பேர் மீது வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே, ஆலை உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது ஆலை போர்மேன் கணேசன் மற்றும் சூப்பர்வைசர் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.