Payload Logo
திரைப்படங்கள்

மீண்டும் மீண்டுமா?  அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்! 

Author

manikandan

Date Published

Good Bad Ugly Update

சென்னை :அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார்.  அர்ஜுன், ரெஜினா ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியான சமயத்திலேயே இது வழக்கமான அஜித் படம் போல இருக்காது என இயக்குனர் கூறிவிட்டார். அதனால் அப்படி எதிர்நோக்கியே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தார்கள். இப்படத்தின் புரமோஷன்களில் லைகா பெரியளவில் ஈடுபடவில்லை. அவ்வப்போது படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது மட்டுமே போஸ்டர்களாக வெளியானது.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திடைப்படத்திற்கும் அதே போல முதற்கட்டமாக இப்படத்தில் திரிஷா, ரம்யா எனும் கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முந்தைய படம் போல படத்தின் ஹீரோயின் திரிஷா, முந்தைய படம் போல யார் யார் நடிக்கிறர்கள் என்ற அப்டேட் அடுத்தடுத்து வருமோ என ரசிகர்கள் இணையத்தில் கிசுகிசுத்து வருகிறார்கள்.

இருந்தும் முந்தைய விடாமுயற்சி திரைப்படம் தான் அஜித் படம் போல இல்லை என்றாலும், குட் பேட் அக்லி திரைப்படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அஜித்தை திரையில் கொண்டு வருவார் என பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆதிக்கின் முந்தைய படமாக மார்க் ஆண்டனி விஷாலுக்கு மிக பெரிய ஹிட் படமாக அமைந்தது போல GBU படமும் பெரிய ஹிட்டாக வேண்டும் என்பதே அஜித் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்குகின்றனர்.

unknown node