Payload Logo
தமிழ்நாடு

சென்னையில் திடீரென வெளுத்து வாங்கிய காற்றுடன் கனமழை.! சாய்ந்து விழுந்த மரங்கள்…

Author

castro

Date Published

சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. காலை முதல் வெப்பம் கொளுத்திய நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டத் தொடங்கியது.

அதன்படி, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி, திருவிக நகர், பாரிமுனை, எழும்பூர், நுங்கம்பாக்கம், முகப்பேர், வில்லிவாக்கம், கொரட்டூர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, வடபழநி, வளசரவாக்கத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால், நுங்கம்பாக்கம் ஸ்பெல்லிங் ரோடு சாலையிலிருந்து காலேஜ் ரோடு செல்லும் பகுதியில் மரம் சாய்ந்தது. மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், செய்யாறு பகுதியில், கன மழையால் மரம் சாய்ந்து 3 வேன்கள் சேதமடைந்தது.

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.


தமிழ்நாடு

பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு 'கோவிந்தா கோவிந்தா' என்ற பக்தர்களின் விண்ணைப் பிளக்கும் முழக்கத்திற்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.