Payload Logo
சினிமா

கிளப்பில் கலக்கும் யாஷ்... பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த 'டாக்ஸிக்' க்ளிம்ப்ஸ் வீடியோ!

Author

gowtham

Date Published

ToxicTheMovie

சென்னை:ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் எப்போதும் வரும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு 'டாக்சிக்' படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு பக்கம் ஒரு லேடி சிகிரெட் அடிக்க, இன்னொரு பக்கம் ஹீரோ கவர்ச்சியாக ஒரு லேடி மீது மதுவை ஊற்றுகிறார். இப்படி, படத்தின் கதையை பற்றி வீடியோ விவரிக்காமல், யாஷ் ஒரு பார்ட்டி ஒன்றை நடத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

unknown node

இந்த படத்தை பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். டாக்ஸிக் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்களூருவில் தொடங்கியது. ஆனால், படத்தின் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கியாரா அத்வானி, நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகவுள்ளது. விரவில் இது தொடர்பான கூடுதல் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.