Payload Logo
இந்தியா

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு - இருமாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.!

Author

gowtham

Date Published

andhra tamilnadu

ஆந்திரப் பிரதேசம்:திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மல்லிகா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 2 லட்சம் நிவாரணமும், 6 பேர் குடும்பத்தினருக்கும் ஆந்திர அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த திருமதி மல்லிகா (வயது 55) உயிரிழந்ததை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த மல்லிகா உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த திருமதி மல்லிகா குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

unknown node

ஆந்திர அரசு நிவாரணம் அறிவிப்பு

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநில முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர்கள் குழு ஒன்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அரசின் முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதி செய்தது.

இந்த குழுவில் உள்துறை அமைச்சர் அனிதா, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு பிறகு, அலட்சியமாக இருக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்குவதாகவும் உறுதியளித்தோடு, கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்தார்.