உடற்பயிற்சி செய்யும் போது உடல் சோர்வா இருக்கா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!
Author
k palaniammal
Date Published

Exercise-தினமும் உடற்பயிற்சி செய்வதில் இருக்கும் ஆர்வமும் விழிப்புணர்வும் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் மீது குறைவாகத்தான் உள்ளது. ஆகவே உடல் சோர்வை குறைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன சாப்பிடலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன் எதுவும் சாப்பிடக் கூடாது என ஒரு சிலர் கூறுவார்கள். அவ்வாறு சாப்பிடாமல் செய்தால் உடல் சோர்வு ஏற்படும் சில சமயங்களில் மயக்க நிலைக்கு கூட கொண்டு செல்லும்,இதனை தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் உடல் பயிற்சி செய்ய உடலுக்கு தேவையான ஆற்றல் தேவை. குறிப்பாக ப்ரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
காபி:
காலையில் காபி குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும், மேலும் தசை பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
இஞ்சி:
இஞ்சியை டீ யுடன் சேர்த்து குடித்து பிறகு உடற்பயிற்சி செய்யும் போது தசைப்பிடிப்பு மற்றும் உடல் வலிகளை சரி செய்யும்.
ஆப்பிள்:
ஆப்பிளில் அதிக அளவு விட்டமின் சத்துகள் உள்ளது, உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஆப்பிளை எடுத்துக் கொண்டால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.
ஜெர்ரி ஜூஸ்:
காலையில் ஜெர்ரி ஜூஸ் ஒரு கிளாஸ் எடுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் போது தசைகளில் ஏற்படும் காயங்களை குறைத்து விரைவில் ஆறச்செய்யும்.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட் ஜூஸ் குடித்து விட்டு உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் அதிக ஆக்ஜிசனை கொடுக்கும். பெண்களுக்கு மிக சிறந்த பானம் ஆகும்.
தேன்:
வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து பிறகு உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வு குறையும் .
பருப்பு வகைகள்:
பருப்பில் புரோட்டின் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. காலையில் ஏதேனும் பருப்பு வகைகளை எடுத்துக் கொண்டு பின் உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு அதிக எனர்ஜி கிடைக்கும் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தலும் சோர்வு இருக்காது .
எனவே உடற்பயிற்சி செய்வதற்கு முன் இவற்றில் ஏதேனும் ஒன்றை பருகி விட்டு பிறகு செய்து வந்தால் உடல் சோர்வு ஏற்படாமல் இருக்கும் மற்றும் தேக ஆரோக்கியமும் பெறலாம்.