Payload Logo
ஆன்மீகம்

வாழ்வில் மகிழ்ச்சி பொங்க பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான் ..!

Author

k palaniammal

Date Published

pongal (1) (1)

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை ;உழவு தொழிலையே அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் உழவுக்கு உதவி செய்த ஆதித்த பகவானுக்கும், மாடுகளுக்கும் ,விவசாயத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தை மாதத்தை மகர மாதம் எனவும் கூறுவார்கள். இந்த தை மாதத்தின் முதல் நாளில் சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.

பொங்கல் பண்டிகை  ஆனது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும் .தமிழகத்தில் தமிழர் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி ஆகவும் கொண்டாடப்படுகிறது .பொங்கல் என்றால் பொங்கி வழிதல் ,பொங்குதல் என்று பொருள் .புதிய பானையில் புத்தரிசி இட்டு அது  பொங்கி வழிந்து வருவதால் நம் வாழ்வும் வளமும் மகிழ்ச்சியும் பொங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் நான்கு நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது .மார்கழியின் கடைசி நாளில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. தை 1ம் தேதி[ஜனவரி 14,2025] செவ்வாய்க்கிழமை தைப்பொங்கலாகவும், தை இரண்டாம் தேதி [ஜனவரி 15]மாட்டுப் பொங்கலும், தை மூன்றாம் தேதி[ஜனவரி 16] காணும் மாட்டுப் பொங்கல் எனவும்  கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் வைக்கும் நேரம் ;

தைப்பொங்கல் செழிப்பை குறிக்கக் கூடியதாகும். இந்த பொங்கல் சூரிய உதயத்திற்கு முன்பாக வைக்க வேண்டும்.  அதிகாலை சூரிய உதயத்தை வரவேற்கும் விதமாக காலை  5;30 மணிக்கு  வைப்பது மிக சிறப்பாக சொல்ல படுகிறது.  மேலும்  காலை 7;30- 9 மணி வரையிலும், பிறகு 10:30 - 12:30 மணிக்கும் , 12 முதல் 1; 30 வரைக்கும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம். ஒரு சிலர் சுப ஓரைகளை கணக்கிட்டு பொங்கல் வைப்பது உண்டு .இது மிகவும் சிறப்பானதாகவும் சொல்லப்படுகிறது .சூரிய ஓரை ,சுக்கிர ஓரை, புதன் ஓரை  போன்ற ஹோரை நேரங்களிலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம்.மேலும் பொங்கல் வைக்க  காலை 9-10;30 எம கண்ட நேரத்தையும் , 3-4;30 ராகு காலத்தையும்  தவிர்ப்பது நல்லது .