Payload Logo
தமிழ்நாடு

சௌமியா அன்புமணி கைது : "உண்மையை மூடி மறைத்து விட முடியாது"..திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழசை!

Author

bala

Date Published

Tamilisai Soundararajan mk stalin

சென்னை :அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவதாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைதும் செய்து வருகிறது. குறிப்பாக, இன்று பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால்  அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிறகு "இதனையடுத்து,இது குறித்து அவர் கூறியதாவது " தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி போராட பெண் தலைவர்களுக்கு கூட அனுமதி மறுப்பது தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது...

இன்று தனது கண்டனத்தை தெரிவிக்க வந்த பாமகவைச் சார்ந்த சகோதரி சௌமியா அன்புமணியை போராட்டக் குரல் எழுப்புவதற்கு முன்பே கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.... தொடர் கைதுகள் உண்மையை மூடி மறைத்து விட முடியாது... போராட்டங்களை அடக்கு முறையால் முடிவுக்கும் கொண்டு வர முடியாது... திமுக திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு வருகிறது.. ஆம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு முடிவுக்கு வரும் முடிவுரை எழுதப்பட்டு வருகிறது" என

unknown node