தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ...
Author
manikandan
Date Published

சென்னை :நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்கியஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் போஸ்டர்கள், இதற்கு முன்னர் வெளியான சில வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக நீண்ட வருடங்கள் கழித்து தங்கள் ஆஸ்தான நாயகனை மங்காத்தா போல கொண்டாட்டம் நிறைந்த படமாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இயக்குனர் ஆதிக் அஜித் ரசிகர் என்பதால் படம் நிச்சயம் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
படத்தின் போஸ்டர், நாயகி திரிஷாவின் அறிமுக வீடியோ ஆகியவை வெளியானதை தொடர்ந்து இன்று இரவு 7.03க்கு குட் பேட் அக்லி டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. அதேபோல தற்போது டீசர் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போல படத்தின் டீசர் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தங்கள் ஆஸ்தான ஹீரோவை ஒவ்வொரு பிரேமிலும் கொண்டாடும் வகையில் டீசர் அமைந்துள்ளது. பின்னணி இசையும் சற்றும் குறைவில்லாமல் ஜி.வி.பிரகாஷ் சிறப்பாக இசையமைத்துள்ளார். படமும் இதே போல அமைந்துவிட்டால்பாக்ஸ் ஆபிஸில் மிக பெரிய ஹிட்டாகும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.