சூர்யாவின் "ரெட்ரோ" பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!
Author
gowtham
Date Published

சென்னை:நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, ரெட்ரோ திரைப்படம், மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2025 கோடை விடுமுறையை குறிவைத்து படக்குழு இந்த வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இந்த படத்தில், பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்க்ஷன் த்ரில்லர் நிறைந்த காதல் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
unknown nodeசூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள ரெட்ரோவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யா ரெட்ரோவைத் தவிர, தனது 45வது படமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்திலும் நடிகவ்விருக்கிறார். அதற்கான வேலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இப்படத்தில் டைட்டில் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. படத்தின் டைட்டில் டீசர் சூர்யாவின் பழைய படமான, ஆறு, சில்லனு ஒரு காதல், அயன் உள்ளிட்ட படத்தில் பார்த்த சூர்யாவை நினைவூட்டுகிறது. டைட்டில் டீசரை பார்க்கும் பொழுது, சூர்யா காதலுக்காக தன்னை சீர்திருத்திக்கொள்ளும் ஒரு நல்ல மனிதனாக காட்டப்பட்டுள்ளது.