Payload Logo
திரைப்படங்கள்

லைக்கா தலையில் இடியை போட்ட விடாமுயற்சி! ஒரு வாரத்தில் இவ்வளவு தான் வசூலா?

Author

bala

Date Published

lyca vidamuyarchi

சென்னை :விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான ஒரு வாரத்தில் படம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி திரைப்படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவலை பாக்ஸ் ஆபிஸ் தகவலை தெரிவிக்கும் ரமேஷ்  பாலா தெரிவித்துள்ளார்.

படம் 150 கோடி வசூல் செய்துள்ளது என்பது பெரிய விஷயமாக இருந்தாலும் படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் தொகை 220 கோடி. எனவே, இன்னும் பட்ஜெட்டை கூட படம் தொடவில்லை என்ற காரணத்தால் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் சோகத்தில் உள்ளது. இன்னும் 70 கோடிகள் வரை தேவைப்படும் என்பதால் விடாமுயற்சி பட்ஜெட் தொகையை மீட்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது.

ஒரு வேலை பட்ஜெட்டை தாண்டவில்லை என்றால் லைக்கா நிறுவனத்திற்கு இந்த படம் மிகப்பெரிய அடியாக இருக்கும். ஏனென்றால், கடைசியாக அவர்கள் தயாரித்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்து இருக்கிறது. குறிப்பாக, சந்திரமுகி 2, இந்தியன் 2, வேட்டையன், லால் சலாம், ஆகிய படங்கள் வசூலை செய்யமுடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, அந்த வரிசையில் விடாமுயற்சி இணையுமா? அல்லது படத்தின் பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.