அண்ணா..அண்ணா...தேம்பி அழுத சிறுமி..ஜெகன் மோகன் ரெட்டி செய்த நெகிழ்ச்சி செயல்!
Author
bala
Date Published

ஆந்திரா :முன்னாள் ஆந்திர முதல்வரும், YSR Congress Party தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இப்போது ஆட்சியில் இல்லை என்றாலும் கூட அவருக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு உள்ளத்தில் இருந்து வருவது என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். குறிப்பாக அவர் எதாவது வெளி இடங்களுக்கு சென்றால் கூட அவர் வருவதை அறிந்து மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பார்கள்.
அப்படி தான் நேற்று அவரது கட்சியின் முக்கிய நிர்வாகியான வல்லபனேனி வம்சியை சந்திக்க விஜயவாடா சென்றிருந்தார். அப்போது அவர் வருவதை அறிந்த மக்கள் உடனடியாக அவருடைய காரை வழிமறித்து கூட்டமாக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். கிட்டத்தட்ட அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை பார்க்க திரண்ட நிலையில் கார் செல்லும்போது பின்பே ஊரணி போல நடந்து சென்றார்கள்.
அப்போது அந்த கூட்டத்தில் சிறுமி ஒருவர் ஜெகன் மோகன் ரெட்டியை பார்க்கவேண்டும் அவருடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று தேம்பி தேம்பி அழுததும் அதற்கு ஜெகன் மோகன் ரெட்டி செய்த செயல் குறித்த வீடியோ தான் தற்போது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. கூட்டத்திற்குள் இருந்த அந்த சிறுமி "ஜகன் அண்ணா" ... "ஜகன் அண்ணா" என அழுதுகொண்டே தனது செய்கை மூலம் எமோஷனலாக செல்பி எடுத்துக்கொள்ளும்படி கேட்டார்.
உடனடியாக இதனை கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி காரில் இருந்து வெளியே வந்து அந்த சிறுமியை தன்னுடைய கைகளில் வாங்கி கொண்டு பாசமாக முத்தம் கொடுத்தார். ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்த இன்ப அதிர்ச்சியில் அந்த பெண் தலைகால் புரியாத சந்தோஷத்தில் இருந்ததும் வீடியோ பார்க்கும்போது தெரிந்தது.
பிறகு அந்த சிறுமி தன்னுடைய போனில் ஜெகன் மோகன் ரெட்டியுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ பார்த்த பலரும் ஜெகன் மோகன் ரெட்டி செய்த நெகிழ்ச்சி செய்யலை பாராட்டி வருகிறார்கள்.
unknown node