Payload Logo
சினிமா

படம் சரியா ஓடல ரேட் கம்மிபண்ணுங்க! தக்லைஃப் படக்குழுவை அதிரவிட்ட நெட்ஃபிளிக்ஸ்!

Author

Bala

Date Published

டெல்லி : கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து உருவாக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படம், ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி, எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 1987-ல் வெளியான ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைந்த இந்த கேங்ஸ்டர் ஆக்ஷன் படம், பாக்ஸ் ஆபிஸில் கலவையான விமர்சனங்களைப் பெற்று, வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனால், படத்தின் டிஜிட்டல் உரிமங்களை 130 கோடி ரூபாய்க்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ், இந்த ஒப்பந்தத்தை 20-25% குறைப்புடன் மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக பிங்க்வில்லா தெரிவித்துள்ளது.

‘தக் லைஃப்’ முதல் நாளில் இந்தியாவில் 15.5 கோடி ரூபாய் வசூலித்தது, இதில் தமிழ் பதிப்பு 13.35 கோடி ரூபாயும், இந்தி 0.65 கோடியும், தெலிங்கு 1.5 கோடியும் பங்களித்தன. ஆனால், எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் வாய்மொழி பரப்புரைகளால், இரண்டாவது நாளில் 54% வசூல் குறைந்து 7.15 கோடி ரூபாயாக சரிந்தது. ஆறு நாட்களில் மொத்தம் 40.95 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து, 50 கோடி ரூபாய் இலக்கை எட்ட முடியவில்லை.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கர்நாடகாவில் கமல் ஹாசனின் கன்னட மொழி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தால் படம் திரையிடப்படவில்லை, இது வசூலை மேலும் பாதித்தது. எனவே, எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறவில்லை என்பதால் படத்தின் ஓடிடி விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.



இந்தியா

நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழி பற்றிய கருத்து சர்ச்சையானது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.