"பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை"..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
Author
bala
Date Published

சென்னை :சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். இது குறித்து பேசிய அவர் "அதே சமயம் சில திட்டங்களை நிறைவேற்றமுடியாமலும் இருக்கிறோம். நிதி இல்லாத காரணத்தால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், அதற்கான நிதி தான் இல்லை.
ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. எத்தனையோ முறை நினைவூட்டி கேட்டிருக்கிறோம். இதுவரை விடுவிக்காத காரணத்தால், மாநில அரசே சொந்த வருவாயை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. தமிழக அரசின் நிலை. இன்னொரு பக்கம் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது" எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் " மத்திய அரசின் சுரங்க திட்டத்திற்கு ஆதரவு அளித்து துரோகம் இழைத்தது அதிமுக தான். டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன். தொடர்ந்து டங்ஸ்டன் திட்டம் குறித்து மீண்டும் பேசி மக்களை குழப்புகின்றனர். கண்டிப்பாக டங்ஸ்டன் திட்டம் என்பது இங்கு வராது.