தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கு: 'குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை' - மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Author
gowtham
Date Published

சென்னை :குன்றத்தூரில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரியாணி மாஸ்டருடன் ஏற்பட்ட தகாத உறவுக்கு இடையூறாக இருந்த பெற்ற குழந்தைகளை கொலை செய்த வழக்கில் குன்றத்தூர் அபிராமி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் 2 குழந்தைகளை கொலை செய்தார் அபிராமி. பாலில் விஷம் கலந்து கொடுத்து ஒரு குழந்தையையும், மற்றொரு குழந்தையை கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்தார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
குழந்தைகளின் மரணத்திற்கு பின்னர், அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அபிராமியின் கள்ளக்காதல் உறவு மற்றும் அதன் தொடர்பு இந்தக் கொலைக்கு காரணமாக இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு 7 ஆண்டுகளாக காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மருத்துவ அறிக்கைகள், பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்த நிலையில், அபிராமி, தனது குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்து, அவர்களை மயக்க நிலைக்கு ஆளாக்கினார். இதனால், இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தச் செயல் திட்டமிட்டு முன்கூட்டியே செய்யப்பட்ட கொலை என வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு 7 ஆண்டுகளாக காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், இன்று (ஜூலை 24) நீதிபதி ப.உ.செம்மல் தீர்ப்பு வழங்கினார், இந்த கொடூர செயலுக்காக அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.