தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்....
Author
gowtham
Date Published

சென்னை:துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடத்திற்கு முன்னேறியது.
தற்போது, இணையதளம் முழுவதும் வெற்றி வாகைச் சூடிய அஜித் தனது குடும்பத்தினர் மற்றும் அணியினருடன் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பியுள்ளது.அஜித் தனது அணியினரை கட்டியணைத்து, குதித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர், நடிகர் அஜித் குமார், வெற்றியை தேசிய கொடியை உயர்த்தியபடியே மகிழ்ச்சியை கொண்டாடிய அவர், தமிழ்நாடு அரசின் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முத்திரையை பெருமையாக உயர்த்திக் காண்பித்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
unknown nodeமுன்னதாக, கார் மற்றும் ஹெல்மெட்டில் தமிழக விளையாட்டு ஆணைய லோகோவை பயன்படுத்தியற்காக அஜித்துக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்திருந்தார். இப்பொது, வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "24H துபாய் 2025 இல் 992 பிரிவில் அஜித் சாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த சாதனையைப் படைத்துள்ள அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட உலகளவில் பிரபலமான ஒரு விளையாட்டு நிகழ்வில் நமது திராவிட மாடல் அரசின் விளையாட்டுத் துறை லோகோவை தங்களது காரில் ஒட்டி பெருமைப்படுத்தியதற்கு நன்றிகள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
unknown node