Payload Logo
சினிமா

டார்கெட் ரூ.1000 கோடியா? குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

Author

bala

Date Published

good bad ugly

சென்னை :விடாமுயற்சி படம் வெளியாவதற்கு முன்னதாகவே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் கொண்டாடலாம் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த அளவுக்கு அஜித் சினிமா கேரியரில் இதுவரை அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும் அந்த படம் மாறியிருக்கிறது. இருப்பினும், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் அதற்கு முன் விடாமுயற்சி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

விடாமுயற்சி படம் வெளியாக்க வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்களுடைய கவனம் குட் பேட் அக்லி படத்தின் மீது திரும்பியுள்ளது. ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு படக்குழுவும் தீவிரமாக படத்தில் வேலை செய்து வருகிறது. இருப்பினும், படம் வெளியாக இன்னும் 2 மாதங்களுக்கு குறைவாகவே உள்ள காரணத்தால் ப்ரோமோஷன் தொடங்கவில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்தது.

ஆனால், இந்த படத்தினை புஷ்பா 1,2 ஆகிய படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த காரணத்தால் கண்டிப்பாக ப்ரோமோஷன் தாறுமாறாக இருக்கப்போகிறது எனவும் சினிமா துறையில் இருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர். இதன் காரணமாக, அஜித் ரசிகர்களும் பெருமூச்சுவிட்டார்கள்.

இந்த சூழலில், தற்போது கிடைத்த தகவலின் படி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை விரைவாக தொடங்கதிட்டமிட்டுள்ளதாம். இன்னும் இரண்டு வாரங்களில் ப்ரோமோஷன் பணியை தொடங்கி எந்த அளவுக்கு ப்ரோமோஷன் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தீவிரமாக செய்ய முடிவு எடுத்திருக்கிறதாம்.

தமிழில் மைத்திரி மூவி மேக்கர்ஸ்  நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது தான். எனவே, முதல் தமிழ் படத்தை சிறப்பாக ப்ரோமோஷன் செய்து வெளியீட்டால் தான் அடுத்ததாக பட வாய்ப்புகள் குவியும் என்பதற்காகவே ப்ரோமோஷன்களில் களமிறங்கவுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக படம் ரூ. 1000 கோடி வசூல் செய்ய போகிறது என கூறி வருகிறார்கள்.