விஜய்யின் தவெகவுடன் முதல் கூட்டணி? - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி அதிரடி முடிவு.!
Author
gowtham
Date Published

சென்னை :தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், அதில் ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், இதுவரை மாநாடு, புத்தக வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்ட விஜய் முன்னதாக பரந்தூர் பகுதியில் நேரடியாக மக்களை சந்திக்கவும் செய்தார்.
சமீபத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மத்திய உள்துறை அமைச்சகம் 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக அறிவித்தது. விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியதையடுத்து தமிழ்நாடு அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது. அந்த வகையில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவை, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது இஸ்லாமியர்களின் வாக்குகளை இழுக்கும் உத்தியாக பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் மேலும் சில முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.