தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி.!
Author
gowtham
Date Published

சென்னை :தமிழ்நாட்டில் நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுபதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, தெரு நாய்களால் பரவும் ரேபிஸ் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2022-ல் 3,65,318 ஆக இருந்த நாய்க்கடி சம்பவங்கள் 2023-ல் 4,40,921 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதில் குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கேரளாவிலும் இதேபோன்று நோய் பாதித்த தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலப்புரம் போன்ற பகுதிகளில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.