SL vs AUS : இமாலய இலக்கை எட்ட முடியாத ஆஸி., அணி... அதிரடியாக ஒருநாள் தொடரை தட்டி தூக்கிய இலங்கை.!
Author
gowtham
Date Published

கொழும்பு :இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இப்பொது ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்று காட்டியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நிர்ணயம் செய்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களமாடிய ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் வெறும் 107 ரன்களுக்கு சுருண்டது.
இலங்கை அணி
இலங்கை அணி சார்பில் முதலில் களமிறங்கிய பதும் நிசங்க வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மதுஷங்கா அரைசதம் அடித்தார். இதன் பிறகு, குசல் மெண்டிஸ் அற்புதமாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவர் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். மேலும், கேப்டன் அஸ்லாங்கா ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் எடுத்தார். அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்தார். ஜனித் 32 ரன்கள் எடுத்து மொத்தத்தில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில், 281 ரன்கள் என்கிற இமாலய இலக்கை ஆஸி., அணிக்கு வைத்தது.
இலங்கை பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா அணி
அணிக்காக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். நான்காவது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் சேர்த்தனர். ஜோஷ் இங்கிலிஸ் வெறும் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 18 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார். மேத்யூ ஷார்ட் 2 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். மேலும், மேத்யூ ஷார்ட் (2) ஆரோன் ஹார்டி (0), க்ளென் மேக்ஸ்வெல் (1) மற்றும் சீன் அபோட் (2) இப்படி அடுத்தடுத்த அவுட்டாகி ஆஸ்திரேலியாவால் 25 ஓவர்கள் கூட தாண்ட முடியவில்லை.
இறுதியில் ஆஸ்திரேலியாவை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கை பற்றியது.