Payload Logo
தமிழ்நாடு

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்!

Author

manikandan

Date Published

Pongal Gift token start today

சென்னை :ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும். அதே போல இந்தாண்டும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம் பெற்ற பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு.

இந்த பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று (ஜனவரி 3) முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று ரேஷன் கடை குடும்ப அட்டைதார்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் டொக்கன் வழங்கப்பட்டு, அதில் குறிப்பிட்டுள்ள தேதியில் குடும்ப அட்டைதார்களில் ஒருவர் வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 13ஆம் தேதிக்குள் 2.2 கோடி குடும்ப அட்டை தரர்களுக்கும் மொத்த பொங்கல் தொகுப்பையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும். ஆனால், இந்த முறை ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்படவில்லை. இதனை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகளே திமுக அரசு மீது அதிருப்தி தெரிவித்து சிறப்பு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பாசிப்பருப்பு, முந்திரி உள்ளிட்ட பொங்கல் வைக்க கொடுக்கப்படும் இதர பொருட்கள் கூட இந்த முறை பொங்கல் தொகுப்பில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.