இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் 'மிக' முக்கிய நிகழ்வு!
Author
manikandan
Date Published

டெல்லி :விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
400 கிலோ எடை கொண்ட 2 செயற்கைகோள்களை விண்ணில் 700 கிமீ தொலைவில் நிலை நிறுத்தும் முயற்சி வெற்றிகரமாக முடிந்தது. இரண்டு செயற்கைகோளும் 20 கிமீ தொலைவில் வெவ்வேறு திசைகளில் நிலை நிறுத்தபட்டது. அதன் பின்னர் அதனை இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.
இந்த இணைப்பு நடவடிக்கையானது நேற்று (ஜனவரி 9) நடைபெறும் என இஸ்ரோ அறிவித்து இருந்தது. ஆனால், இந்த ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் நேற்று நடைபெற இருந்த இந்த செயல்முறை தள்ளிவைக்கப்பட்டது என இஸ்ரோ தகவல் தெரிவித்தது.
அதனை தொடர்ந்து, தற்போது, வெளியான தகவலின்படி, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும், 1.5 கி.மீ இடைவெளியில் செயற்கைகொள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், நாளை காலை 500 மீ தொலைவில் இந்த செயற்கைகோள் இணைப்பு நடவடிக்கை தொடரும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
unknown node