Payload Logo
தமிழ்நாடு

"மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்கக் காரணம்" கைதுக்கு பின் சௌமியா அன்புமணி காட்டம்.!

Author

gowtham

Date Published

Sowmiya Anbumani

சென்னை:அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள் குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைதும் செய்து வருகிறது.

அந்த வகையில், இன்று பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, சௌமியா அன்புமணி கைதுக்கு ராமதாஸ், சசீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று காலையில் கைது செய்யப்பட்ட சௌமியா அன்புமணி அன்புமணி, பாமக-வினர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த சௌமியா அன்புமணி, 'தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இப்படி, பெண்கள் பயத்துடன் வெளியே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பாமக சார்பில் போராட்டம் நடத்தினோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது என லிஸ்ட்போட்டு எடுத்துரைத்து சௌமியா அன்புமணி, பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது. வெக்க கேடு... தப்பு பண்ணவங்கள கைது பண்ண காவல்துறை முன் வரவில்லை

ஆனால், அதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய எங்களை போலிஸ் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை, மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்கக் காரணம்" என்று காட்டத்துடன் பேசியுள்ளார்.