Payload Logo
கிரிக்கெட்

SLvAUS : ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை.? 2வது ஒருநாளில் நிதான ஆட்டம்!

Author

manikandan

Date Published

SLvAUS 2nd ODI

கொழும்பு :இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்ததில் இரு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.

அதனை அடுத்து, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை அடுத்து 2வது ஒருநாள் போட்டியும் அதே கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணி டெஸ்டில் 2 போட்டிகளிலும் வென்றது போல இலங்கை அணி 2 போட்டிகளிலுமே வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பந்துவீசி வருகிறது. தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்க 6வது ஓவரில் ஆரோன் ஹார்டி பந்துவீச்சில் 6 ரன்களில் அவுட் ஆக்கினார். தற்போது வரையில் 22 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது.  குசல் மெண்டிஸ் 51 ரன்களுடனும்,  நிஷான் மதுஷ்க 47 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.

அணி வீரர்கள் :

இலங்கை அணி சார்பில்  சரித் அசலங்கா தலைமையில் பதும் நிஸ்ஸங்க, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), கமிந்து மெண்டிஸ், , ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, எஷான் மலிங்க, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்,  ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஹார்டி, க்ளென் மேக்ஸ்வெல், சீன் அபோட், பென் துவர்ஷூயிஸ், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.