Payload Logo
தமிழ்நாடு

"கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்" சீமான் பரபரப்பு பேட்டி! 

Author

manikandan

Date Published

NTK Leader Seeman

சென்னை :நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டினர். இந்த சம்மன் விவகாரம் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

நேற்று, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை ஒருவர் கிழித்துவிட, அதனை விசாரிக்க சென்ற போலீசாரிடம் சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் என்பவர் துப்பாக்கி காட்டியதாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் சீமான்.,

இதனை அடுத்து இன்று இரவு 8 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். அதற்காக,இன்று தர்மபுரி கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு தற்போது விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் பேசுகையில், " அதிமுக ஆட்சிகாலத்தில் இப்படி நடந்தது இல்லை. நடிகை அளித்த புகாரில் முகாந்திரம் இல்லை என விசாரிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் ஆட்சியில் இப்படி செய்யும் போது எனக்கு திமிர் வருகிறது. அந்த பயம் உங்களுக்கு இருக்கட்டும்.

சட்டம் என்ன செய்தது?

அண்ணா பல்கலைக்கழகத்தில் சட்டம் தன் கடமையை செய்ததா? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆளும் கட்சியாக வந்த உடன் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்களே எடுத்தார்களா? நாடெங்கெலும் கஞ்சா பரவுகிறது தடுக்க நடவடிக்கை எடுத்தார்களா?

இன்னும் தொடர்கிறது.,

15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த பிரச்சனையை வைத்து நீங்கள் தான் கற்பழித்து வருகிறீர்கள். அந்த பொம்பள பிரச்னையை முடித்துவிட்டு போங்க என்று நான் தான் வழக்கு போட்டேன். அந்த நீதிபதி என்ன நினைத்தாரோ இன்னும் இந்த நாடகத்தை தொடர செய்துள்ளார்.  விசாரணையில் என்ன கேக்க போறாங்க, எப்போ நீங்க சந்தீச்சீங்க, முதலில் என்ன பேசுனீங்கனு கேப்பாங்க.

விசாரணைக்கு தயார் :

முதலில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்கள் எனக் கூறினார். அடுத்து கருக்கலைப்பு என கூறினார். 2024 தேர்தல் சமயத்தில் மீண்டும் புகார் கூறினார் அந்த நடிகை. நாங்க நிறைய பேருக்கு உதவுவோம். அப்படி தான் அந்த பொம்பளைக்கும் 2, 3 மாதம் உதவி செஞ்சிருக்காங்க. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு தான் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதற்கு பிறகு நான் ஆரம்பிப்பேன். நான் இப்போதே விசாரணைக்கு வரத் தயார்.  என்னை இரவு 8 மணிக்கு வர சொல்லிருக்காங்க. " என சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.