Payload Logo
தமிழ்நாடு

மதுரையில் நடக்கும் தவெக-ன் 2து மாநாடு நடக்கும் இடத்தில் மணல் புயல்.!

Author

gowtham

Date Published

TVK Maanaadu - madaurai

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது, இதில் 237 ஏக்கர் மாநாட்டு திடலுக்கும், 217 ஏக்கர் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாநாடு நடைபெற உள்ள பாரபத்தி கிராமத்தில், மணல் புயல் வீசுவதாகவும், இதனால் மாநாட்டு ஏற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பகுதி செம்மண் பகுதியாக இருப்பதால், மாநாட்டு ஏற்பாடுகளுக்காக நடைபெற்று வரும் சமன் செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

unknown node

இந்த மாநாட்டிற்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 27 செயல்வடிவ குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறார்களை அழைத்து வர வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, மாநாட்டிற்காக 506 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் பார்க்கிங் வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் கூடுதல் இடம் கோரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மதுரை காவல்துறையிடம் மாநாட்டிற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி ஆனந்த் மனு அளித்துள்ளார், இதற்கு 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை காவல்துறை முன்வைத்து விளக்கம் கோரியுள்ளது.