Payload Logo
இந்தியா

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

Author

gowtham

Date Published

Indigo Flight

புதுச்சேரி :புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று மாலை 5.15 மணிக்குப் புறப்பட்டபோது  ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதையில் செல்லும்போது கோளாறு கண்டறியப்பட்டதால், பயணிகள் பாதுகாப்பு கருதி விமானம் நிறுத்தப்பட்டது.

பின்னர், பயணிகள் இறக்கிவிடப்பட்டனர், இதையடுத்து விமானம் விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உட்பட 70 பயணிகள் இருந்தனர்.  பயணிகளில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், பாஜக புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் புதுச்சேரி முன்னாள் சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் அடங்குவர்.

இந்த நிலையில், இண்டிகோவின் அறிவுறுத்தலின் படி, விமானம் ரத்து செய்யப்பட்டால், பயணிகளுக்கு மாற்று விமானத்தில் இடமாற்றம், முழு பணத்திருப்பு, அல்லது எதிர்கால பயணத்திற்கு கிரெடிட் வழங்கப்படும். பயணிகள் தங்கள் பதிவு விவரங்களை (PNR எண்ணுடன்) இண்டிகோ இணையதளத்தில் சரிபார்த்து, மாற்று ஏற்பாடுகளை செய்யலாம் அல்லது 0124-6173838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், இண்டிகோ விமான நிலையில் உள்ள கியோஸ்க்குகள் மூலமோ அல்லது ஆன்லைனிலோ மறுபதிவு செய்ய வசதி உள்ளது. பயணிகள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ அறிவிப்பு பெற்றிருக்கலாம்.