விண்வெளியில் ரோபோட்டிக் கரங்களின் செயல்பாடு! இஸ்ரோ படைத்த புதிய சாதனை!
Author
bala
Date Published

ஸ்ரீஹரிகோட்டா :கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி60 ரக ராக்கெட் (PSLV C60 rocket) ஏவப்பட்டது. செயற்கைகோள் இணைப்பு சோதனைக்காக (Space Docking Experiment) SDX01 மற்றும் SDX02 எனும் இரு செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து சென்றது.
இதில், ஏவப்பட்டPOEM-4ரோபோட்டிக் கை விண்ணில் செயல்பட தொடங்கியுள்ளது என தற்போது இஸ்ரோ வீடியோ ஒன்றை வெளியீட்டு நெகிழ்ச்சியாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தான் இது போன்று ரோபோர்ட்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இப்போது இந்தியாவே பெருமைப்பட கூடிய அளவுக்கு முதன் முறையாக, இந்தியாவில் உள்ள தொழிநுட்பத்தை வைத்து தயார் செய்து இந்திய விஞ்ஞானிகளால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரோபோட்டிக் கை விண்ணில் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இஸ்ரோ புதிய சாதனையும் படைத்துள்ளது. விண்ணில் ஏவப்பட்டுள்ள அந்த ரோபோடிக் கரங்கள் தற்போது பூமியில் இருந்து 350 கி.மீ. உயரத்தில் செயல்பட்டு வருகின்றன எனவும், எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு ரோபோட்டிக் கரங்கள் ஆதாரமாக திகழும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ரோபோட்டிக் கை விண்ணில் என்ன செய்யும்?RRM-TD ரோபோடிக் கை விண்வெளியில் ஏவப்படும் செயற்கைகோள்களில் ஏதேனும் பழுதுகளை ஏற்பட்டது என்றால் உடனடியாக, அதனை சரிசெய்து அதனை பராமரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, மனிதர்கள் மேலாண்மை செய்யும் விண்வெளி மிஷன்களுக்கான செலவைக் குறைக்கும்.துல்லியமான ரோபோடிக் செயல்பாடுகள் அதிக திறமையுடன் பணிகளை முடிக்க உதவும்.
இதன் மூலம் எதிர்காலங்களில் விண்வெளியில் ஏவப்படும் செயற்கைகோள்களில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் கூட விஞ்ஞானிகளுக்கு பணிச்சுமை குறையும். இது இந்தியாவின் Make in India திட்டத்தின் கீழ் செய்யப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
unknown node