வெளியானது 'Rise Of Dragon' பாடல்... வைப் செய்த பிரதீப் - கௌதம் மேனன்!
Author
gowtham
Date Published

சென்னை:இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon" பாடல் வெளியானது. "LOSS எல்லாமே MASS-ஆ மாறும்" என்கிற வரிகள் அடங்கிய ஒரு சூப்பர் பெப்பி பாடலுக்கு பிரதீப் ரங்கநாதன் மற்றும் கௌதம் மேனன் நடனமாடி வைப் செய்துள்ளனர்.
'ரைஸ் ஆஃப் டிராகன் ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை அனிருத், நதிஷா தாமஸ் மற்றும் எல் ஃபெ கொயர் ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளனர். மேலும் விக்னேஷ் சிவன் பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார்.
unknown nodeபடத்தில் பிரதீப்பைத் தவிர, அனுபமா பரமேஸ்வரன், பல்லவியாக கயாது லோஹர், மயில்வாகனனாக மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் யூடியூபர்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.
'லவ் டுடே' படத்தை தொடர்ந்து பிரதீப்புடன் இரண்டாவது படத்தை குறிக்கும் இந்த 'டிராகன்' படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. ஆனால், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் படக்குழு அதிர்க்கற்பூரவமாக அறிவிக்கப்படவில்லை.