Payload Logo
கிரிக்கெட்

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார்! வேதனையில் விராட் கோலி ரசிகர்கள்!

Author

bala

Date Published

rajat patidar

பெங்களூர் :இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார் ஏற்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால், இதற்கு முன்பு  கேப்டனாக அணியை வழிநடத்திய ஃபாஃப் டுபிளெஸி டெல்லி அணிக்கு சென்றுள்ளார்.

2022-ம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஃபாஃப் டுபிளெஸி, அணியை தொடர்ந்து இரண்டு சீசன்களில் பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். அது மட்டுமின்றி, 2023 சீசனில் 730 ரன்கள் அடித்து அசத்தினார். இருப்பினும், ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் அவர் பெங்களூர் அணியால் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து, அவரை டெல்லி அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.

எனவே, பெங்களூர் அணிக்கு பழையபடி அனுபவம் வாய்ந்த விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. தகவல் மட்டுமின்றி ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாகவும் அது தான் இருந்தது. ஆனாலும், அவர் தான் கேப்டன் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருந்த நிலையில், பெங்களூர் நிர்வாகம் இன்று காலை இந்த ஆண்டு பெங்களூர் அணி கேப்டன் யார் என்பது  பற்றிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தது.

அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டது படி பெங்களூர் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமியணம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விராட் கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு வழங்கப்படவில்லை இவருக்கு எதற்கு கேப்டன் பதவி என்கிற விமர்சனமும்...இவரை போல இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுப்பதில் தப்பு இல்லை என்கிற ஆதரவும் எழுந்திருக்கிறது.

ரஜத் படிதார் கடந்த 2021 முதன் முறையாக பெங்களூர் அணியில் இணைந்தார். அதன்பிறகு, 2022-லும் பெங்களூரு அணிக்காக இருந்தார். பின் 2023 காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நிலையில், 2024-மீண்டும் எண்டரி கொடுத்து சிறப்பாக விளையாடினார்.2024 ஆம் ஆண்டில், ஆர்சிபி அணிக்காக பட்டீதர் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 போட்டிகளில் 33 சிக்ஸர்களை அடித்து 395 ரன்களைக் குவித்தார். பேட்ஸ்மேனாக அசத்திய அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதிலும் அசத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

unknown node