Payload Logo
தமிழ்நாடு

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” - பிரதமர் மோடி புகழாரம்.!

Author

gowtham

Date Published

Rajendra Cholan - pm modi

அரியலூர் :கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ” சோழர் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார மற்றும் இராணுவ உயரங்கள் இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன. ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார், அதை ராஜேந்திர சோழன் வலுப்படுத்தினார்.

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள். பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று சோழ சாமராஜ்ஜியம், ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி. பிரிட்டிஷார் அல்ல, ஜனநாயகத்தின் முன்னோடிகள் சோழர்களே.  உலகம் முழுவதும் பேசும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்.

சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இரு பெயர்களும் பாரதத்தின் இரு பிரகடனங்கள். இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு. சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது, சோழர்களின் கண்காட்சியை பார்த்து பிரமித்தேன். சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று.

தஞ்சை பெரிய கோயிலைவிட கங்கைகொண்ட சோழபுரம் கோயில் சிறிதானது. இதற்கு தந்தை ராஜராஜன் மீது ராஜேந்திர சோழன் கொண்ட பக்தியே காரணம் என்றார். இறுதியில் தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.