Payload Logo
தமிழ்நாடு

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

Author

gowtham

Date Published

PM Modi

திருச்சி :பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை 26 ) தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மாலை வந்தார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.

தூத்துக்குடியில், அவர் 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான பல உள்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்தார். இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் 450 கோடி ரூபாய் செலவில் திறக்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான 550 கோடி ரூபாய் மதிப்பிலான மின்பரிமாற்ற பாதையும் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி நிகழ்ச்சிக்குப் பின், அவர் திருச்சிக்கு சென்றார். அங்கு அமைச்சர் கே.என்.நேரு, துரை வைகோ, எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்றனர். அதன்படி, நேற்றிரவு திருச்சியில் தங்கினார். இரண்டாம் நாளான இன்று (ஜூலை 27) பிரதமர் மோடி அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சென்றார்.

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மேலும், 1,030 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்தார்.

விழா முடிந்ததும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து ஹெலிபேட் உள்ள சோழகங்கத்திற்கு சென்றடைந்த பின் பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் திருச்சி புறப்படும் முன் பொதுமக்களை நோக்கி மோடி கையசைத்து உற்சாகம் செய்தார். திருச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்று பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.