ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
Author
bala
Date Published

ஜப்பான் :தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர் அளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்படுவதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் கியூஷி பகுதியில் இருந்து 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதனால் ஜப்பானின் கியூஷி உள்ளிட்ட நகரங்கள் அதிர்வுகளை உணர்ந்தன. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணத்தால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்து தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. அவற்றில் கட்டிடங்கள் குலுங்கும் காட்சியையும் நம்மளால் பார்க்க முடிகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ள காரணத்தாலும், மீண்டும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.