Payload Logo
இந்தியா

உல்லு, ஆல்ட் உள்பட ஆபாச OTT தளங்களுக்கு தடை! மத்திய அரசு அதிரடி!

Author

bala

Date Published

ullu alt balaji banned

டெல்லி:மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP உள்ளிட்ட 25 OTT தளங்களை இந்தியாவில் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தளங்கள் ஆபாச மற்றும் அநாகரிக உள்ளடக்கங்களை ஸ்ட்ரீம் செய்து, தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 67A, பாரதிய நியாய சன்ஹிதா 2023-ன் பிரிவு 294, மற்றும் பெண்களின் அநாகரிக சித்தரிப்பு (தடை) சட்டம் 1986-ன் பிரிவு 4-ஐ மீறியதாக அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த தளங்களில் வெளியிடப்பட்ட விஷயங்கள் எதுவும் , “கதை, அல்லது சமூகச் செய்தி இல்லாமல், முழுவதுமாக பாலியல் உள்ளடக்கங்கள், நிர்வாணக் காட்சிகள் மற்றும் ஆபாச விஷயங்களை” மையமாகக் கொண்டிருந்ததாக அமைச்சகம் தெரிவித்தது. இதில், ULLU-வின் ‘House Arrest’ தொடர், உட்பட பெண்களை இழிவுபடுத்தும் மற்றும் தவறான குடும்ப உறவுகளை சித்தரிக்கும் உள்ளடக்கங்கள் குறிப்பிடப்பட்டன.

மேலும், இதற்கு முன், தேசிய மகளிர் ஆணையம் (NCW) மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) இந்த தளங்களுக்கு எதிராக புகாரளித்திருந்தன. இந்த உத்தரவின்படி, இணைய சேவை வழங்குநர்களுக்கு (ISPs) 26 இணையதளங்கள் மற்றும் 14 மொபைல் செயலிகளை (9 Google Play Store-லும், 5 Apple App Store-லும்) தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த தளங்கள் IT சட்டத்தின் பிரிவு 79(3)(b) மற்றும் IT (இடைத்தரகு வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகள் 2021-ஐ மீறியதாகவும், அரசு அறிவிப்புகளை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த தளங்களுக்கு வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பு (safe harbour) நீக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மற்ற தளங்களில் Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, H*tX VIP, MoodX, Fugi, Mojflix, மற்றும் Triflicks ஆகியவை அடங்கும்.

இந்த நடவடிக்கை, டிஜிட்டல் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், குறிப்பாக மணி, பயண பங்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது. மேலும், இதற்கு முன் மார்ச் 2024-ல் தடை செய்யப்பட்ட ஐந்து தளங்கள் புதிய டொமைன்களில் மீண்டும் ஆபாச உள்ளடக்கங்களை வெளியிட்டதாகவும் கண்டறியப்பட்டது. இந்த நடவடிக்கை, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. முன்னதாக, உச்சநீதிமன்றம் ஏப்ரல் 2025-ல், ஆபாச உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து, தற்போது அதிரடியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.