ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!
Author
castro
Date Published
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை நடந்த நிலையில், மீண்டும் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
தற்பொழுது, திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஏடிஜிபி ஜெயராம் மற்றும் ஜெகன் மூர்த்தி இருவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை செய்யப்படுகிறது. அதன்படி, ஜெகன் மூர்த்தியிடம் டிஎஸ்பி தமிழரசி, ஜெயராமிடம் டிஎஸ்பி புகழேந்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாலங்காடு காவல் நிலையத்தின் தனித்தனி அறைகளில் இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்றைய தினம், சிறுவனை கடத்த அரசு வாகனத்தை கொடுத்து உதவியதாக ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் சஸ்பெண்ட் செய்து உள்துறை சயலாளர் உத்தரவிட்டார்.
அதே நேரம், சிறுவன் கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது, திருவாலங்காடு காவல்நிலையத்தில் ஆள் கடத்தல், மிரட்டல், அத்துமீறியது தம உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.