Payload Logo
தமிழ்நாடு

"அன்புமணி நடைப்பயணத்துக்கு தடையில்லை" - பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.!

Author

gowtham

Date Published

Anbumani Ramadoss

சென்னை :அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி சுற்றுப்பயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அன்புமணியின் நடைபயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, டிஜிபி சங்கர்ஜிவால் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நடைபயணத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது. அன்புமணியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கவில்லை எனவும் பாமக வழக்கறிஞர் பாலு இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது பதிவில், ''நடைப்பயணத்துக்கு தடையில்லை, அன்புமணி ராமதாஸின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்ததாக'' குறிப்பிட்டுள்ளார்.

unknown node